டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ் டிரைலர் ரிலீஸ்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

'சட்னி - சாம்பார்' டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, சென்டிமென்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெயினர் சீரிஸாக இருக்கும்.

இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகளின் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்கள் எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

More News

வரலட்சுமியின் முதல் காதலன் நான் இல்லை.. நிக்கோய் சச்தேவ் பேட்டி..!

நடிகை வரலட்சுமி சமீபத்தில் மும்பை தொழிலதிபர் நிக்கோய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இன்று சென்னையில் இந்த தம்பதிகள் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்தனர்

டிரைலர் வெளியான சில நாட்களில் அடுத்த அப்டேட்.. 'தங்கலான்' குறித்து பா ரஞ்சித்தின் பதிவு..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வந்து மிரட்டியது என்பதை ஏற்கனவே

'இந்தியன் 2' பரபரப்பு நீங்கும் முன்பே கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு.. உச்சத்தில் எதிர்பார்ப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில்  கமல்ஹாசனின்   அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு கிடைத்த புதிய நண்பர்.. வீட்டுக்கு செல்லும் அளவுக்கு நெருக்கம்.. எல்லாம் 'கோட்' மாயாஜாலம்..!

'கோட்' படத்தில் நடிக்கும் போது விஜய்க்கு புதிய நண்பர் கிடைத்துள்ளதாகவும் அவருடைய வீட்டிற்கு செல்லும் அளவுக்கு விஜய் நெருக்கமாக பழகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரே படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில்.. ஷாருக்கான் கேமியோ.. இயக்குனர் யார் தெரியுமா?

ஒரே படத்தில் விக்ரம், தனுஷ் மற்றும் பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடித்த இருப்பதாகவும் கூறப்படுவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.