ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 'சட்னி சாம்பார்' முதல் எபிசோட் விமர்சனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள ’சட்னி சாம்பார்’ என்ற வெப் தொடரின் முதல் எபிசோட் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
ஊட்டியில் நிழல்கள் ரவி ’அமுதா கஃபே’ என்ற உணவகத்தை நடத்தி வரும் நிலையில் அந்த உணவகம் சாம்பாருக்கு மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது. அந்த உணவகத்தின் சாம்பாரை ருசிப்பதற்காகவே அனைவரும் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது குடும்பத்தினரிடம் உட்கார்ந்து நிழல்கள் ரவி சாப்பிட்டு கொண்டு இருக்கும் நிலையில் திடீரென மயக்கம் அடைகிறார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து அவருக்கு கேன்சர் முற்றிய நிலையில் உள்ளது என்று கைவிடுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவம் பார்க்கலாம் என்று நிழல்கள் ரவி மகன் சொல்ல, அவரது மனைவி வேண்டாம் என்று தடுக்கிறார். கடைசி காலத்தில் அவர் இங்கேயே இருக்கட்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் நிழல்கள் ரவி தனது மகனை அழைத்து ஒரு முக்கியமான ரகசியத்தை சொல்லுகிறார். சென்னையில் தனக்கு ஒரு உறவு இருப்பதாகவும் அவரை நேரில் அழைத்து வந்து என் முன் நிறுத்த வேண்டும் என்றும் நான் இறப்பதற்கு உள்ள அந்த நபரை பார்க்க வேண்டும் என்றும் வரம் கேட்கிறார்.
இதையடுத்து அப்பா கூறிய அந்த நபரை நிழல்கள் ரவி மகன் அழைத்து வருவதற்காக சென்னை செல்ல அந்த நபர் தான் யோகி பாபு என்பதை அறிகிறார். யோகிபாபுவுக்கும் நிழல்கள் ரவிக்கும் என்ன சம்பந்தம்? யோகி பாபுவை ஊட்டிக்கு அழைத்து வந்தார்களா? என்பது தான் முதல் எபிசோடின் காட்சிகள் ஆகும்.
ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சட்னி சாம்பார்’ தொடர் முதல் எபிசோடிலேயே கதை ஆரம்பித்து நகைச்சுவை, சென்டிமென்ட் , விறுவிறுப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், மைனா நந்தினி, நிழல்கள் ரவி, தீபா சங்கர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்தொடரை ராதா மோகன் இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments