3 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய 'டன்கர்க்' படத்தின் கதை இதுதான்
- IndiaGlitz, [Monday,March 05 2018]
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படம் என்றாலே ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறுவதோடு வசூலையும் வாரி குவிக்கும் என்பது தெரிந்ததே. இந்த வகையில் அவரது லேட்டஸ்ட் திரைப்படம் தான் 'டன்கர்க்'
இரண்டாம் உலகப் போரின்போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டன்கர்க்’ திரைப்படத்தில் பணிபுரிந்த அலெக் கிப்சன் மற்றும் ரிச்சர்டு கிங் ஆகியோர்கள் சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருதையும் மார்க், கிரேக் லேண்டக்கர், கேரி ரிசோ ஆகியோர் சிறந்த ஒலிக் கலவைக்கான விருதையும் சிறந்த சவுண்ட் எடிட்டிங் பிரிவிற்கான விருதை லீ ஸ்மித் ஆகியோர்களும் வென்றனர்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஜெர்மன் நாட்டின் ஹிட்லரின் படைகள் நுழைவதைத் தடுக்க மெஜினாட் லைன் என்ற பெயரில் மாபெரும் அரண்களை பிரான்ஸ் நாடு அமைத்துக் கொண்டது. ஆனால் பெல்ஜியம்- லக்ஸம்பெர்க்- ஹாலந்து வழியாக பிரான்சுக்குள் அதிரடியாக நுழைந்த ஹிட்லரின் படைகள் பிரான்ஸ் நாட்டின் வட பகுதிக்குள் ஊடுருவி சுமார் 1 லட்சம் பிரான்ஸ் மற்றும் 3 லட்சம் இங்கிலாந்து படைகளை அடித்து, துவம்சம் செய்தது. இந்த நேரத்தில் உயிரோடு தப்பித்த 4 லட்சம் வீரர்கள் சென்ற இடம்தான் டன்கர்க். உணவு கூட இல்லாமல் அந்த 4 லட்சம் ராணுவ வீரர்களின் பரிதவிப்பை வெளிப்படுத்துவதுதான் 'டன்கர்க்' படத்தின் மீதிக்கதை
டன்கர்க் படம் முழுவதும் போர், மரண பயம், பசி, குண்டுவீச்சு ஆகிய கோணங்களில் கதை நகர்ந்தாலும் படத்தின் மெல்லிய அடிநாதம் மனிதநேயம் என்பதை இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அழுத்தமாக பதிவு செய்த படம்.