close
Choose your channels

'லியோ' படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. வேற லெவலில் எதிர்பார்ப்பு..!

Friday, June 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய்தத் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனண்ட்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் என்பவர் ’லியோ’ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் டென்சில் ஸ்மித், ’லியோ’ படத்தின் 4 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், தனது கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இந்த படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டென்சில் ஸ்மித் ‘டெனண்ட்’ உள்பட ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவர் மும்பையை சேர்ந்தவர் என்பதும் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment