இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் ஆஸ்கர் விருது  திரைப்படம்.. வேறு என்னென்ன படங்கள்?

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் உட்பட இந்த வாரம் வெளியாகவுள்ள ஓடிடி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விஜய் டிவி ரக்சன் நடித்த ’மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் இந்த வாரம் டென்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் ஆகா ஓடிடியில் 'மிக்ஸ்அப்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த வாரம் இந்த இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் ஜெயராம், மம்முட்டி நடித்த படம் ’ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என்ற திகில் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஃபைட்டர்’ என்ற திரைப்படம் இன்று நெட்பிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரன்சிங் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியிருந்தார்.

அதேபோல் ஆஸ்கார் பரிசுகளை அள்ளிக் குவித்த ’ஓப்பன் ஹெய்மர்’ என்ற திரைப்படம் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்த படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் கலக்கும்

அமேசான் ப்ரைம் தளத்தில்,  பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்”

பங்குனி உத்திரம் 2024: முருகனை வழிபடும் மகிழ்ச்சியான திருவிழா!

பங்குனி உத்திரம், தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்துத் திருவிழாவாகும். 2024 ஆம் ஆண்டு,

பெருங்கூட்டத்தில் ஒரே ஒரு ரசிகரிடம் மட்டும் அருகில் சென்ற விஜய்.. என்ன காரணம்?

தளபதி விஜய் தற்போது 'கோட்' படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் தன்னை பார்க்க காத்திருக்கும்

ஆண்களுடைய பொழுதுபோக்குக்கு ஒரு பெண்ணோட உடல் தான் தேவைப்படுகிறதா?

இந்த சமுதாயம் பொதுவாக பெண்களுக்கு சொல்லி கொடுப்பது என்னவென்றால், அதிகம் பேசக்கூடாது,அறிவாளித்தனமா பேசக்கூடாது, முக்கியமாக ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது இதைத்தான் சொல்லி கொடுக்கிறது.......

தண்ணீரில் இருக்கும் ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுக்கும் புதிய நண்பர்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ஹன்சிகாவுக்கு அவரது புதிய நண்பர்கள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.