close
Choose your channels

கிறிஸ்துமஸ் படங்கள்: ஒரு மினி பார்வை

Monday, December 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 'மாரி 2': பிரமாதமான புரமோஷன். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் விளம்பரங்கள்தான். 3 பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது ஒரு பலம். முதல் பாதியை விட காமெடியை அதிகம் எதிர்பார்க்கலாம். நல்ல ஓப்பனிங் நிச்சயம். படத்தின் ரிசல்ட்டை பொறுத்து ஹிட்டாகலாம்.

சிவகார்த்திகேயனின் 'கனா': ஐஸ்வர்யா ராஜேஷின் கடின உழைப்பு டிரைலர், டீசரில் தெரிந்துள்ளதால் எதிர்பார்ப்பு பல மடங்கு ஏற்பட்டுள்ளது. அருண்காமராஜின் முதல் படம் என்பதால் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஒவ்வொரு பிரேமிலும் இருக்கும். டீசர், டிரைலர், பாடல்கள் ஹிட்டாகியுள்ளது ஒரு பிளஸ். சிவகார்த்திகேயனின் சிறப்பு தோற்றம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமையும்.

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி': விஜய்சேதுபதியின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. டீசர், சினிக்பீக் வீடியோக்களில் இருக்கும் வசனங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. அய்யா ஆதிமூலம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள்.

ஜெயம் ரவியின் 'அடங்கமறு': சுமாரான எதிர்பார்ப்பே இந்த படத்திற்கு இருந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த 6 நிமிட சினிக்பீக் வீடியோ, இந்த படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. 'இரும்புத்திரை' போன்று டெக்னாலஜி கலந்த திரைக்கதை இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணுவின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்': காமெடிக்கு கியாரண்டியான படம் என்பது தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளிவரும் ஓவியாவின் முதல் படம் என்பது ஒரு பெரிய பிளஸ். ரெஜினாவின் கவர்ச்சி, யோகிபாபுவின் காமெடி நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment