ஐபிஎல்-இல் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை… பகீர் கருத்தை வெளியிட்ட முக்கிய வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில் தற்போது நடைபெற்றுவரும் ஐபில் போட்டிகளில் கலந்து கொள்ளாதது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளாதது குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த கிறிஸ் கெயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் சென்ற விதத்தைப் பார்க்கும்போது நான் சரியாக நடத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் நான் நிறைய பங்களிப்பை செய்திருக்கிறேன். ஆனால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட்டிற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை வாழப் பழகிக்கொள்கிறேன் என்று கூறிய கிறிஸ் கெயில், மீண்டும் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடிய கிறிஸ் கெயில் 4,965 ரன்களை அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 175 ரன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வருடம் 10 போட்டிகளில் விளையாடிய இவர் 193 ரன்களையும் முந்தைய வருடத்தில் 7 போட்டிகளில் விளையாடிய இவர் 288 ரன்களை எடுத்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com