அவதூறு வழக்கால் கிரிக்கெட் வீரர் பெற்ற மிகப்பெரிய தொகை

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பதிவான அவதூறு வழக்குகள் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவில் பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ்ட் கெயில் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் அவருக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் ஒன்று கிறிஸ்ட் கெயில் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை ஒன்றை எழுதியது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அந்த ஊடகம் கிறிஸ்ட் கெயிலின் மதிப்பு, மரியாதையை குறைக்கும் வகையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுடன் கூடிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், இதனால் அந்த ஊடக நிறுவனம் கிறிஸ்ட் கெயிலுக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த ஊடகம் அப்பீல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

லைகா நிறுவனம் அறிவித்த அதிகாரபூர்வ '2.0' வசூல் விபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது

கோலிவுட்டை நோக்கி வரும் ஹாலிவுட் நடிகைகள்

பத்து வருடங்களுக்கு முன் கோலிவுட் என்ற ஒரு திரையுலகம் இருந்ததே ஹாலிவுட் கலைஞர்களுக்கு தெரியாது.

இப்படி ஒரு ரிகார்டிங் வேர்ல்டிலேயே நடந்ததில்லை: 'மரண மாஸ்' தலைவர் குத்து குறித்து அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரஜினியின் ரசிகர்களுக்கு வெளிவரவுள்ளது என்பது தெரிந்ததே

சென்னை மெரீனாவில் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம், ஒருசில மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் சிறிய அளவில் ஆரம்பமானது.

விஜய்சேதுபதியின் சிலையை திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள நிலையில் அவர் நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.