விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் விமல். அதன் பின்னர் ’களவாணி’ ’கலகலப்பு’ ’மஞ்சப்பை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’கன்னி ராசி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’சோழ நாடான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் கண்ணா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு நவீன் சங்கர் என்பவர் இசையமைக்கிறார். நக்‌ஷத்திராபிரகாஷ் ஒளிப்பதிவில் நவீன்குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை கோல்டன் ஷர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும், விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

இங்க அடிச்சா மும்பையில அடிவிழும்: 'லாபம்' டிரைலர் விமர்சனம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கிய 'லாபம்' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

மகளை கல்லூரியில் சேர்க்க மோசடி: பிரபல நடிகைக்கு ஜெயில் மற்றும் ரூ.3.74 கோடி அபராதம்

மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகை மற்றும் அவருடைய கணவருக்கு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.3.74 கோடி அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய தமிழக முதல்வர்!!!

இந்து மதத்தில் பிரதான தெய்வமாக மதிக்கப்படும் விநாயகப் பெருமானின் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும்

சூரரை போற்று ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூர்யா!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரை போற்று' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகியும், ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்காததால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை