ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் செளகார்பேட்டையின் இந்தி டைட்டில்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2015]

கடந்த சில மாதங்களாக பேய்ப்பட சீசனில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமா உலகின் அடுத்த பேய்ப்படம் 'செளகார்பேட்டை". இரண்டு வேடங்களில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி, விவேக், சரவணன், சம்பத் ராஜ், சுமன், கோவை சரளா, வடிவுக்கரசு, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வைத்தியநாதன் இயக்கியுள்ளார். ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இந்தியிலும் டப் செய்து ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய இயக்குனர் முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இந்தி பதிப்பிற்கு 'தந்திர சக்தி' (Tantra Shakti) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் தனது இரண்டு வேடங்களில் ஒன்றில் அகோரியாக நடித்துள்ளார். இதுவரை பல படங்களில் மென்மையான வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த் முதல்முறையாக அகோரியாக நடித்துள்ளார். மேலும் 'அரண்மனை' என்ற பேய்ப்படத்தில் ஏற்கனவே நடித்த அனுபவம் பெற்றிருக்கும் ராய்லட்சுமி இந்த படத்தில் பேயாகவே நடித்துள்ளார். இந்த படம் இந்தியில் டப் செய்யப்படுவதால், இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இருவருக்கும் கண்டிப்பாக பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.