பிரபல பெண் நடன இயக்குனர் கோவாவில் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கோவாவில் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் டினா சிது. இவர் சமீபத்தில் கோவா சென்று இருந்த நிலையில் அங்கு திடீரென காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர் டினாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரபூர்வமாக அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடன இயக்குனர் டினா மரணம் குறித்து நடன இயக்குனர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகினர் தங்களது அதிர்ச்சியையும் இரங்கல்களையும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். டினாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தீப், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments