'சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு பிரபலத்தின் டுவிட்

  • IndiaGlitz, [Friday,December 20 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த பாடலுக்கு விஜய், சாந்தனு உள்பட பலர் நடனமாடி நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சதீஷ் நடனம் அமைத்து வருவதாக உறுதி செய்யப்பட்டுளது. இதுகுறித்து நடன இயக்குனர் சதீஷ், தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிட்டேன்’ என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
 

More News

அவரை தூக்கிலிடுங்கள்.. முன்னரே இறந்தால் உடலை கட்டித்தொங்கவிடுங்கள்..! பாக். நீதிமன்றம்.

துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் பெண் மீது 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கல்லூரி பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்: காதல் தோல்வியா?

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் அந்த கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த ஒருவர் திடீரென சமீபத்தில் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம்

ரஜினி அப்படியே சொல்லவே இல்லை: அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில்

"5 வருடம் முன் இருந்த பொருளாதார பேரழிவை நாங்கள் தான் சரி செய்திருக்கிறோம்"..! பிரதமர் மோடி.

டெல்லியில் நடைபெறும் அசோசம் (ASSOCHAM - Associated Chambers of Commerce and Industry of India) அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்