பழம்பெரும் நடன இயக்குனர் திடீர் மறைவு: திரையுலகினர் அஞ்சலி 

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி பாலிவுட் திரையுலகில் மட்டும் என்று இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்று மரணம் அடைந்த சரோஜ்கான் அவர்களுக்கு வயது 72

நடன இயக்குனர் சரோஜ்கான் அவர்களுக்கு கடந்த 17ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மூச்சுத் திணறலுக்கு மட்டுமே அவருக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருடைய மகனும் நடன இயக்குனருமான ராஜூகான் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்றுவந்த சரோஜ்கான் அவர்களுக்கு திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை உறுதி செய்துள்ளது, பழம்பெரும் பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மறைவுக்கு அக்ஷய் குமார் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகில் நடன இயக்கத்தில் கலக்கி வந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது/ சமீபத்தில் வெளியான கங்கனா ரனாவத் மணிகர்ணிகா உள்பட பல படங்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார் என்பதும் தமிசில் ரஜினிகாந்த் நடித்த ’தாய் வீடு’ மணிரத்தினம் இயக்கிய ’இருவர்’ உள்பட ஒருசில படங்களுக்கு அவர் பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் இயக்குனராக பணிபுரிந்த சரோஜ்கான் அவர்கள் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்: சொந்த வீடு வாங்கியதாகவும் தகவல்

நடிகர் விஷாலிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் சென்னையில் சொந்த வீடு வாங்கியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரூ.2 கோடி வரை என்னிடம் பேரம் பேசப்பட்டது: சாத்தான்குளம் சம்பவம் குறித்து சுசித்ரா திடுக்கிடும் தகவல்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த செய்தி முதலில் சாதாரணமாகத்தான் ஊடகங்களில் வெளியானது

நண்பர்களுடன் விஜய் மகனின் குரூப் போட்டோ: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலில் இருந்ததாகவும்,

ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.