ஆண்ட்ரியா நடிக்கும் படத்தில் இயக்குனராகும் நடன இயக்குனர்!

  • IndiaGlitz, [Saturday,October 09 2021]

தமிழ் திரையுலகில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்பட ஒருசில நடன இயக்குனர்கள் இயக்குனாராகியுள்ள நிலையில் பிரபல நடன இயக்குனர் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது

தமிழ் திரையுலகின் பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இயக்குனராகும் படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். இந்த படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த சுஜாதா விஜயகுமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். பாபி ஆண்டனி இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்க, அகில் ராஜ் ஒளிப்பதிவும், சரத்குமார் படத்தொகுப்பு பணிகளையும் செய்கின்றனர். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.