தண்டோரா மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் ஒன்று தண்டோரா, குடுகுடுப்பைக்காரர்கள் மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் ’சூ மந்திரகாளி’. ஈஸ்வர் கொற்றவை என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அன்னக்கிளி வேலு தயாரித்துள்ளார்.
கடவுள் சக்தி, மாய மந்திர சக்தி என இரண்டு வகையான சக்திகள் உலகில் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில் இதனை நம்புபவர்கள், நம்பாதவர்கள் குறித்த ஒரு கிராமத்து கதையை ’சூ மந்திரகாளி’ என்ற திரைப்படம். கொல்லிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் முற்றிலும் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இளம்பெண் ஒருவரை மந்திரவாதி காப்பாற்றுவதாக அழைத்து வருகிறார். ஆனால் அந்த இளம்பெண் சிக்கலில் மாட்ட கதாநாயகன் அவரை மீட்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 24-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ்நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா கலைஞர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் ஆகியோர்களை பயன்படுத்தி இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி தியேட்டரில் ’சூ மந்திர காளி’ படம் வருகிறது, அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் என தண்டோரா செய்யப்படும் வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூ மந்திரகாளி படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ் பாரம்பரிய முறையில் படக்குழு அறிவித்தனர்.
— r.s.prakash (@rs_prakash3) September 20, 2021
தமிழ்நாட்டில் 50 மேற்பட்ட கிராமங்களில் தண்டோரா கலைஞர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என பயன்படுத்தி "சூ மந்திரகாளி படம் செப்டம்பர் 24ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் பாருங்க! pic.twitter.com/aJfZpTtWtR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments