உடலுறவின்போது… மூச்சுதிணற வைப்பது கூட கிரிமினல் குற்றமா???
- IndiaGlitz, [Friday,January 08 2021]
இங்கிலாந்து அரசாங்கம் பெண்களை மூச்சு திணற வைப்பது கூட கிரிமினல் குற்றம் என்பதற்கான புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது. இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவதற்கான பின்னணிதான் தற்போது கடும் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
பாலியல் வல்லுறவுக்கு ஆளான 5 இல் 1 பகுதி பெண்கள், தாங்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது மூச்சு திணற செய்யப்பட்டதாகவும் அதோடு கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். பாலியல் வல்லுறவில் மூச்சுத் திணற அடிப்பது ஒரு சிறிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவும் பெண்களின் பாலியல் கொலைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக மாறி விடுகிறதாம். அதனால்தான் பெண்களை மூச்சுத்திணற அடிப்பது அல்லது தாக்கும் நோக்கில் கழுத்தை நெரிப்பது போன்றவை தனி வகை குற்றமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்தக் குற்றத்திற்கு குறைந்தது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் இங்கிலாந்தின் புதிய சட்டம் விதிமுறை வகுத்து இருக்கிறது. இந்தச் சட்டத்தை குறித்து விமர்சனம் செய்யும் சிலர் இதுபோன்ற தனி வகை குற்றச்சாட்டுகள் பாலியல் வழக்கை குறைத்து மதிப்பிட்டு விடலாம் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுகுறித்து, கணவன்மார்கள் கூட இனிமேல் பாலியல் உறவு கொள்ளும்போது மனைவியை துன்புறுத்த அஞ்சுவார்கள். எனவே இந்தப்புதிய சட்டம் வரவேற்புக்கு உரியதுதான் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரக் கணக்கில் கொலை செய்யப்படும் 3 இல் ஒரு பகுதி பெண்கள் கழுத்து நெறிக்கப்பட்டோ அல்லது மூச்சுத் திணறடிக்கப்பட்டோ கொலைச் செய்யப்பட்டு உள்ளனர். அதிலும் பாலியல் வழக்குகளில் இது முற்றிலும் உண்மையாகவே மாறிவிடுகிறது. எனவே இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது இனி ஆண்கள், பெண்கள் மீது அதிகாரம் செலுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பதற்கு இப்புதிய சட்டம் உதவலாம் என அந்நாட்டு வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.