பன்முக தன்மை கொண்ட சோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 07 2016]

நாடக, திரைப்பட நடிகர், துக்ளக் ஆசிரியர், அரசியல் விமர்சகர், மோடி, ஜெயலலிதா உள்பட பல அரசியல் தலைவர்களுக்கு நெருங்கிய நண்பர், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் போன்ற பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சோ ராமசாமி இன்று நம்மிடையே இல்லை. ஆம், சோ ராமசாமி இன்று அதிகாலை 4.40க்கு காலமானார். அவருக்கு வயது 84

ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள் ஆகியோர்களுக்கு மகனாக 1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் சோ ராமசாமி. மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு, லயோலா கல்லூரி, மற்றும் விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்த சோ, அதன்பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்

1970ஆம் ஆண்டு துக்ளக் என்ற இதழை தொடங்கினார். அது இன்றுவரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அரசியல் நையாண்டியில் வல்லவரான சோ'வின் எழுத்துக்களை படிப்பதற்கெனவே ஒரு கூட்டம் தமிழகத்தில் இருந்தது. இவருடைய அரசியல் விமர்சனத்தில் சிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம்

தமிழ் திரைப்பட உலகில் சோ'வின் சேவை மகத்தானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சோ ராமசாமி, 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் முகமது பின் துக்ளக்', உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 22 நாடகங்கள், 8 நாவல்கள் மற்றும் எண்ண்ற்ற அரசியல் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பத்திரிக்கைத்துறை பணிக்காக 1985 ஆம் ஆண்டு ''மஹாரான மேவார்' வழங்கிய 'ஹால்டி காட்டி' விருதும், 1986 இல் 'வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு 'கொயங்கா விருதும், 1998 ஆம் ஆண்டு 'நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் மாநிலங்களவை உறுப்பின‎ராக நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.

அரசியல் மற்றும் திரையுலகில் பல சாதனைகள் செய்த சோ ராமசாமி இன்று நம்மைவிட்டு நீங்கிவிட்டாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் நம்மிடையே இருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் நேரம்-இடம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் சம்பிரதாயங்கள்...

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடரந்து அவரது வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும்...

ஜெயலலிதா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல்

தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோர்...

ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழப்பு: சீயான் விக்ரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரபல நடிகர் விக்ரம் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது...

ஜெயலலிதா ஒரு வலிமையான பெண்மணி. அமிதாப்பச்சன் இரங்கல்

ஜெயலலிதாவின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அடுத்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இரங்கல் தெரிவித்துள்ளார்...