மீண்டும் தள்ளிப்போகிறதா சியான் விக்ரம் படம்..? ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஜூலை மாதம் கண்டிப்பாக வெளிவரும் என்று படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளியானது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜூலை மாதம் இந்த படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும் ஆகஸ்ட் அல்லது அதற்கு அடுத்த மாதம் தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’துருவ நட்சத்திரம்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பல வருடங்களாக ’துருவ நட்சத்திரம்’ படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தள்ளிப் போய் உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த மாதமாவது வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.