மகளால் சீயான் விக்ரமுக்கு கிடைத்த பதவி உயர்வு: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 21 2020]

சமீபத்தில் திருமணமான மகளால் சீயான் விக்ரமுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

சீயான் விக்ரம் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அக்ஷிதா தற்போது கர்ப்பமாக உள்ளார். விரைவில் அவர் தாயாக போவதாக செய்தி அறிந்து விக்ரம் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி விக்ரம் விரைவில் தாத்தா என்ற பதவி உயர்வு பெற போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்த செய்தி அறிந்ததும் விக்ரம் மகளுக்கும் விக்ரமுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடும் விக்ரம், விரைவில் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி திரையுலகை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம்தான். இந்த நிலையில் விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பம் ஆனதை அடுத்து ஒரு சிறிய விழாவாக அவரது குடும்பத்தினர் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’, கவுதம் மேனன் இயக்கி வரும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்க போகிறார் என்பதும், இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் 15 அர்ச்சகர்கள் உள்பட திருப்பதியில் மட்டும் சுமார் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 வயது பெண் டிவி ரிப்போர்ட்டர் சாலை விபத்தில் பலி!

26 வயது பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த சம்பவம் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

பல மாதங்களுக்கு பின் சந்திப்பு: மகிழ்ச்சியில் தளபதி விஜய் குடும்பம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு சில மாதங்களாக கனடாவின் சிக்கியிருந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சென்னை திரும்பியுள்ளதால்

பிரபல அரசியல்வாதிக்கு எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தற்போது அரசியல் தலைவர்களும் கருத்துக்கூற தொடங்கிவிட்டனர்.

லயன் இன் லம்போர்கினி: இந்திய அளவில் டிரெண்டான ரஜினியின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து என்ன செய்தி வெளி வந்தாலும், அவர் ஒருசில நிமிடங்கள் கேட் முன் நின்று பேட்டி அளித்தாலும் அல்லது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டாலும் உடனே இந்திய அளவில்