சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் தமிழ்ப்படம்

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சீயான் விக்ரமின் மகன் துருவ் கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அர்ஜூன்ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகிறார். இந்த தகவலை விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தில் துருவ் அறிமுகம் ஆவதால் அவரது அறிமுகப்படம் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் துருவ் தந்தையை போல் பல சாதனைகள் புரிய IndiaGlitz தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

More News

பிரபல இயக்குனரின் படத்தில் முதல்முறையாக கார்த்திக்-கவுதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் தந்தை-மகன் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி-பிரபு, சிவகுமார்-சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் என உண்மையான தந்தை-மகன் நடித்த படங்கள் பல உள்ளது

'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது.