'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால்.. வெற்றி விழாவில் விக்ரம் பேச்சு..!

  • IndiaGlitz, [Saturday,August 17 2024]

’தங்கலான்’ படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்காக இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் சியான் விக்ரம் தெரிவித்தார்.

சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தின விருந்தாக திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் 26.44 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம் ’தங்கலான்’ படத்தை 100 பாகங்கள் கூட எடுக்க முடியும், ஆனால் உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பதால், நீங்கள் காட்டும் அன்புக்காக, இரண்டாம் பாகத்தை உருவாக்க நாங்கள் ஆசைப்பட்டோம்.

இதுகுறித்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரிடம் கலந்து உரையாடியுள்ளேன், ரஞ்சித் தனது அடுத்த பட வேலையை முடித்துவிட்டு ’தங்கலான் 2’ படத்திற்காக அழைத்தால் உடனே சென்று விடுவேன்’ என்று விக்ரம் கூறியுள்ளார். இதனை அடுத்து ’தங்கலான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

7வது இடத்திற்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'.. டிஆர்பியில் டாப் 6 இடங்களில் சன் டிவி தொடர்.!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல்கள் குறித்த டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த

'கனா காணும் காலங்கள்' சீசன் 3.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமாகும் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான  "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது

என் வாழ்க்கையை மாற்றிய முருகன்! - Singer Velmurugan

பிரபல பாடகர் வேல்முருகன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தனது ஆழ்ந்த ஆன்மீக வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

'மழை பிடிக்காத மனிதன்', 'ராயன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் திடீரென இன்று ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்.. தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு வெப் தொடர்கள் வெளியாக இருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக கருதப்படுகிறது.