தளபதி விஜய் 'அதை' ஒருபோதும் பண்ணமாட்டார்: விக்ரம் தெரிவித்த ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கருத்துக்கள் பரவி வருவதால் இந்த படம் விக்ரமின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் டுவிட்டரில் நேற்று விக்ரம் உள்பட படக்குழுவினர் ரசிகர்களிடம் உரையாடியபோது தளபதி விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விக்ரம், தளபதி விஜய் குறித்து கூறிய போது, ‘விஜய் ஒரு எளிமையான அமைதியான மனிதர் என்றும், ஆனால் அவர் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருப்பார் என்றும் ,அவருடைய ஸென்ஸ் ஆப் ஹ்யூமர் மிகவும் அபாரமானது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் எல்லாவற்றையும் விட அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல டான்ஸர் என்றும் அவர் இதுவரை டான்ஸ் காட்சிகளுக்கு முன் ரிகர்சல் செய்ததை நான் பார்த்ததே இல்லை என்றும், எவ்வளவு பெரிய கஷ்டமான ஸ்டெப்ஸ்களாக இருந்தாலும் அவர் ரிகர்சல் பண்ண மாட்டார் என்றும் கூறினார்
நான் உள்பட அனைத்து நடிகர்களும் பலமுறை ரிகர்சல் செய்துவிட்டு அதன்பின்னர் தான் டான்ஸ் ஆடுவோம் என்றும் விஜய் ஒருபோதும் ரிகர்சல் செய்ய மாட்டார் என்றும், அது அவருடைய டான்ஸ் திறமையை காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இந்த தகவலை தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
.@chiyaan about Thalapathy Vijay ❤️ #Varisu @actorvijay #Cobra pic.twitter.com/lpmYLdHpG2
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com