சீயான் விக்ரம் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: பூஜை புகைப்படங்கள் வைரல்!

நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதனை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை இன்று நடந்துள்ளது. விக்ரமின் 61 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க உள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது

ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் மூர்த்தி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சன்னிலியோன் சவாலை ஏற்று கொண்ட ஸ்ருதிஹாசன்: வைரல் வீடியோ

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட ஸ்ருதிஹாசனின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

ரெட் காஸ்ட்யூமில் மிரட்டும் கிளாமர்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்

இப்படி ஒரு காஸ்ட்யூமை பார்த்ததே இல்லை: தமன்னாவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படம்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

வெளிநாட்டு டூரில் இருக்கும் பூஜா ஹெக்டே, இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்கள் என ஒரு மாத கால நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார்

விஜய் டிவி ரக்சன் நடிக்கும் புதிய திரைப்படம்: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் பணிபுரியும் பிரபலங்கள் பலர் பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.