செம்ம ஸ்டைலில் சியான் விக்ரம்.. அடுத்த பட அறிவிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

நடிகர் சியான் விக்ரம் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சற்றுமுன் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரிடம் அடுத்த பட அறிவிப்பு எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்

விக்ரம் நடித்த ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் அவர் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் பிரபல இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விரைவில் அடுத்த பட அப்டேட்டை வெளியிடுங்கள் என்று கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

More News

மம்முட்டி மகன், முதலமைச்சர் கேரக்டரில் ஜீவா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி..!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'யாத்ரா' என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இஸ்ரேலில் சிக்கி கொண்ட சந்தானம் பட நடிகை.. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியாததால் பதட்டம்..!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இடையே திடீரென போர் ஏற்பட்ட நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு திரைப்பட விழா ஒன்றுக்கு சென்ற பிரபல நடிகை ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும்

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து.. அதிர்ச்சி புகைப்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இவர் திடீரென காலில் கட்டு போட்டு படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு

3 படங்களிலும் ஒரே மெசேஜ்.. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடூரம்.. பார்த்திபன் பதிவு..!

கடந்த வாரம்  சித்தார்த் நடித்து தயாரித்த 'சித்தா' மற்றும் மம்முட்டி நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்',  இந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' ஆகிய  மூன்று படங்களும் பெண் குழந்தைகளுக்கு

நாளை விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. 'லியோ' படத்தின் ஆச்சரியமான அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.