close
Choose your channels

செம்ம ஸ்டைலில் சியான் விக்ரம்.. அடுத்த பட அறிவிப்பு எப்போது?

Sunday, October 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சியான் விக்ரம் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சற்றுமுன் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரிடம் அடுத்த பட அறிவிப்பு எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்

விக்ரம் நடித்த ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் அவர் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் பிரபல இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விரைவில் அடுத்த பட அப்டேட்டை வெளியிடுங்கள் என்று கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment