ரஜினியின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் வில்லனா? சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சியான் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’தலைவர் 170’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார் என்பது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமின் கேரக்டர் நடிப்புக்கு சரியான தீனி இருக்கும் வகையில் அமைந்துள்ளதே வில்லனாக நடிக்க விக்ரம் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு சியான் விக்ரமுக்கு லைகா நிறுவனம் 50 கோடி ரூபாய் ஒரே பேமண்டில் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதனை அடுத்து விக்ரம் இந்த படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் முறையாக ரஜினிகாந்த் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதும் குறிப்பாக வில்லனாக நடிக்க இருப்பதும் கோலிவுட் திரை உலகினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

மே 26ஆம் தேதி ஓடிடியில் 'பொன்னியின் செல்வன் 2'? ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஒரு மாதம் கழித்து அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த கிரிக்கெட் பிரபலம்..! ஆச்சரியமான தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் நடித்துவரும் நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான முத்து

'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. புதிய தேதியை அறிவித்த படக்குழு..!

ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் 'சீதாராமம்' நடிகை.. வேற லெவல் வளர்ச்சி..!

துல்கர் சல்மான் நடித்த 'சீதாராமம்' என்ற திரைப்படத்தில் ராணியாக நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஹீரோ யார்?

பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா வந்தனா நடித்த நிலையில் தற்போது தில் ராஜு தயாரிக்கும் அடுத்த படத்திலும் அவர்தான்