சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

விக்ரம், நயன்தாரா நடிப்பில் அரிமாநம்பி பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'UA' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம். மேலும் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் விக்ரமின் நடிப்பை வெகுவாக பாரட்டியதாகவும் 'ஐ'க்கும் மேலே' என்று புகழ்ந்ததாகவும் படக்குழுவினர் பெருமையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் மொத்தம் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரு ஆக்சன் படத்திற்குரிய சரியான அளவு என்று ரன்னிங் டைம் குறித்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி-விஜய் திருமணங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை

ஒரு நடிகருக்கு நான்கு தலைமுறைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அதைவிட வேறு ஏதாவது ஒரு பெருமை வேண்டுமா? அத்தகைய பெருமையை பெற்றிருப்பவர்...

அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை...

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண்விஜய்யின் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக அருண்விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அருண்விஜய் கைது செய்யப்பட்டதாகவும்...

விஷாலின் அடுத்த படத்திற்கு சிவாஜி பட டைட்டில்?

விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் டப்பிங் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் என்றும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம்...

'தர்மதுரை'யை பாராட்டிய பிரபல இயக்குனர்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில்...