முடிச்சிரேண்டா இன்னிக்கு.. வா முடிச்சிட்ரேன்: சியான் விக்ரமின் 'வீர தீர சூரன்' டீசர்..!
- IndiaGlitz, [Monday,December 09 2024]
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சற்று முன் இந்த டீசர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சியான் விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவரின் இடையே நடக்கும் அதிரடி மோதல்தான் இந்த படத்தின் கதை என்றும், சியான் விக்ரம் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்றும் இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.
விக்ரம் ஜோடியாக துஷாரா விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சித்தா’ பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தை பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார். ஷிபு தமீன் தயாரித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக டீசரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீசரில் உள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளதால், இந்த படம் விக்ரமுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.