சியான் விக்ரமின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா? அஜித் படத்திற்கு பாதிப்பு வருமா?
- IndiaGlitz, [Friday,November 29 2024]
அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்பு, அடுத்த 10 நாட்களில் சியான் விக்ரம் நடித்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி’ மற்றும் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களுமே பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, விக்ரமின் வீரதீர சூரன் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு தின விடுமுறை தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜனவரி 14-ஆம் தேதி குட் பேட் அக்லி’ மற்றும் ஜனவரி 24-ஆம் தேதி ’வீரதீர சூரன் படங்கள் வெளியானால், இடையில் 10 நாட்கள்தான் உள்ளது என்பதால் அஜித் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், ’வீரதீர சூரன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், இந்த படத்தின் விளம்பர பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ், சித்திக் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘வீர தீரன் சூரன்’ படத்தை அருண் குமார் இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.