சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் ‘மகான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘மகான்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் கேரக்டரின் புதிய போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
??????#MahaanFirstSingle, #Soorayaatam from 22.09.2021 ??????
— Seven Screen Studio (@7screenstudio) September 20, 2021
A @Music_Santhosh musical! ??#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @SonyMusicSouth @proyuvraaj #Mahaan ?? pic.twitter.com/bM2BhllVR9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments