என்னை பத்தி தெரியனும்னா, நீ இன்னும் கொஞ்சம் காத்திருக்கனும்: கடாரம் கொண்டான் டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
அபிஹாசன், அக்சராஹாசன் ஜோடிக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை விக்ரம் எப்படி தீர்க்கின்றார் என்ற ஒருவரி கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. கர்ப்பிணி வேடத்தில் நடித்திருக்கும் அக்சராஹாசன், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற அளவில் நடிப்பு. நாசர் மகன் அபிஹாசனும் ரொமான்ஸ் நடிப்பிலும் ஆக்சனிலும் அசத்தியுள்ளார்.
வாயில் சுருட்டு, வெள்ளை தாடி, கம்பீர உடல்வாகு, ஸ்டைலான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு, அசத்தலான ஆக்சன் என படம் முழுவதும் சீயான் விக்ரம் ஆக்சன் மழை பொழிந்துள்ளார். ஸ்ரீனிவாஸ் குப்தாவின் வெளிநாட்டு காட்சிகள் கண்ணுக்கு குளிமை. பிரவீண் எடிட்டிங், ஜிப்ரான் இசை ஆகியவை டிரைலரிலேயே பட்டையை கிளப்புவதால் படத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம்.
ராஜேஷ் எம்.செல்வாவின் ஸ்டைலிஷான ஆக்சன் காட்சிகள் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மொத்தத்தில் தமிழில் ஒரு ஹாலிவுட் ஆக்சன் படம் வரும் ஜூலையில் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றது. டிரைலரின் முடிவில் வரும் 'என்னை பத்தி தெரியனும்னா, நீ இன்னும் கொஞ்சம் காத்திருக்கனும்' என்ற வரிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com