'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்.. சிவகார்த்திகேயன் படத்துடன் மோதலா?

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது தான் இந்த படம் ரிலீஸ் தேதியை நோக்கி நெருங்கி வருவதாக வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தின் பின்னணி இசை பணியை முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் தொழில்நுட்ப பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே ஜூலை 14ஆம் தேதி தான் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.