close
Choose your channels

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா சியான் விக்ரம் படம்? செம்ம போட்டி தான்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி தினத்தில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சியான் விக்ரம் நடித்த படமும் இந்த பட்டியலில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் தீபாவளிக்கு செம்ம போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜப்பான்’ ’ஜிகர்தண்டா 2’ ’அயலான்’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள சில பணிகளை மட்டும் முடித்துவிட்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வரும் தீபாவளிக்கு விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment