விக்ரமின் 'கோப்ரா' படத்தின் சிங்கிள் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாயாஜாலம்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் மாயாஜால இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பா விஜய் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை வாகு மசான் பாடியுள்ளர. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.