முதல் நாளை விட பாதியாக குறைந்ததா 2வது நாள் வசூல்: 'கோப்ரா' 2 நாள் வசூல் நிலவரம்!

  • IndiaGlitz, [Friday,September 02 2022]

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியானது. இந்தப் படம் முதல்நாளில் தமிழகத்தில் ரூபாய் 12 கோடி வசூல் செய்த நிலையில் 2-வது நாளில் அதில் பாதி கூட வசூல் செய்யவில்லை என டிரேடிங் வட்டாரங்களில் இருந்து வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன் தினம் முதல் நாளில் அதிகாலை காட்சி உள்பட அனைத்து காட்சிகளிலும் இப்படத்தின் வசூல் அபாரமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது நாளில் பாதியை விட குறைந்து உள்ளது.

இந்த படம் நேற்று 2-வது நாளில் 5.5 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நேற்று இரண்டாவது நிலையில் இந்த படத்தின் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்ட போதிலும் வசூலில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் வசூலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. ’கோப்ரா’ திரைப்படம் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.17.50 கோடி வசூல் செய்திருப்பதாகவும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சேர்த்து மொத்தம் 50 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.