முதல் 2 படங்கள் சூப்பர் ஹிட்.. 3வது படத்தில் விக்ரம்.. பிரபல இயக்குனரின் அடுத்த பட அப்டேட்..!

  • IndiaGlitz, [Friday,December 13 2024]

தமிழ் திரை உலகில் முதல் இரண்டு படங்களை சூப்பர் ஹிட் படமாக கொடுத்த பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு நடித்த ’மண்டேலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன.

சற்று முன், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று அறிவித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், விரைவில் இந்த படம் குறித்த மற்ற அப்டேட்களையும் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

சியான் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’வீர தீர சூரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், விக்ரமின் 63வது படமாக மடோன் அஸ்வின் படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோகன்லாலின் பரோஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமிழ் டிரைலர் எப்போது தெரியுமா?

மோகன்லாலின் " பரோஸ்"  திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில்  வெளியாகிறது  என்றும், அதுமட்டுமின்றி இந்த படத்தின்

முருகன் பெயரை சேர்த்த பிறகு வாழ்க்கை மாறிய அதிசயம்! - DNA ஜோதிடம்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், DNA ஜோதிட நிபுணர் ராகுல் சிங்காரவேல் அவர்கள், ஜோதிடத்தைப் பற்றிய புதிய பரிணாமம் குறித்து விளக்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் ஆன்மீக பலன்கள் – முருகன் வழிபாடு மற்றும் ஜோதிட பரிகாரங்கள்

கார்த்திகை தீபத்தில், முருகன் வழிபாடு பெரும் ஆன்மீக பலன்களை தருகிறது.

இதுல கூட போட்டியா? 5 நிமிட இடைவெளியில் ரஜினிக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்-நயன்.. கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஊடகங்களை எச்சரித்த நடிகை சாய் பல்லவி..!

தன்னை பற்றி பொய்யான மற்றும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டால் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது