'சாமி'க்கும் 'சாமி 2'க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்!!

  • IndiaGlitz, [Saturday,August 06 2016]

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக 'இருமுகன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் 'சாமி' படத்திற்கும் 'சாமி 2' படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
'சாமி' படத்தில் விக்ரம், ஆறுச்சாமி' என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். திருநெல்வேலி நகரமே ஆறுச்சாமியின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலும் மாறியிருக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் 'சாமி 2' படத்தில் விக்ரம் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த படம் விக்ரமின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், ஹரி இயக்கத்தில், ஷிபுதமீன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்-அமலாபால் இணைந்து எடுத்த முக்கிய முடிவு

கடந்த சில நாட்களாக இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவகாரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் விஜய் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் செல்வராகவன் நாயகி

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரெஜினா, தற்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம்.

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு இந்திய இயக்குனர்?

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் ஒரு திரைப்பட இயக்குனரின் சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி என்ற தகவல் இந்திய திரையுலகினர் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது....

மகேஷ்பாபு படத்தில் இணைந்த 'கபாலி' இரட்டையர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் வசூல் இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் பணிபுரிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது.