கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,November 21 2018]

கடந்த வாரம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா பகுதிகளை துவம்சம் செய்துவிட்ட நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம், கால்நடை சேதம் என டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை கஜா புயல் சுருட்டி கொண்டு போய்விட்டது.

இந்த நிலையில் பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் கோலிவுட் திரையுலகினர் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சீயான் விக்ரம் ரூ.25 லட்சம் கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ரூ.25 லட்சம், லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி, ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விஜய் ரூ.45 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம், நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கஜா புயலின் உண்மையான பாதிப்பு என்ன? கமல்ஹாசன் கேள்வி

கடந்த வாரம் கஜா புயல் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களை சிதறடைத்து சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தன்ஷிகா நேற்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடினார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'தளபதி', 'சிவாஜி' படங்களை அடுத்த '2.0' செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும்

கனமழை எச்சரிக்கை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறை

கஜா புயலை அடுத்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளதை அடுத்து நாளை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலால் திக்கற்று நிற்கும் தென்னை விவசாயிகள்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தின் தீவிரம் இன்னும் பலருக்கு புரியவில்லை. பொதுவாக புயல் அடிக்கும்போது மரங்கள் சாய்வது, வீடுகள் சேதம் அடைவது போல்