ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழப்பு: சீயான் விக்ரம்
- IndiaGlitz, [Wednesday,December 07 2016]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரபல நடிகர் விக்ரம் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்டு ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னை போல் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார். அவருடைய மன உறுதி, சொல்வன்மை, ஆளுமை ஆகியவற்றை நாம் இழந்துள்ளோம்.
அவரது மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'
இவ்வாறு சீயான் விக்ரம் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.