நேற்று ஒரு லுக், இன்று ஒரு லுக்.. சியான் விக்ரமின் அசத்தல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

நடிகர் விக்ரம் கடந்த சில மாதங்களாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்திற்காக நீண்ட தாடி மற்றும் நீண்ட முடி விக்ரம் வளர்ந்திருந்தார் என்பதும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தாடியை மட்டும் எடுத்து நேற்று ஸ்டைலிஷ் ஆன தோற்றம் கொண்ட சில புகைப்படங்கள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் அவர் கெட்டப்பை மாற்றி உள்ளார். இன்று அவர் முடியையும் வெட்டி சூப்பர் ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார் என்பதும் அவர் ரசிகர் ஒருவருடன் இந்த கெட்டப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சியான் விக்ரம் நேற்று ஒரு லுக், இன்று ஒரு லுக் என தினந்தோறும் ஸ்டைலிஷ் ஓட்டத்தில் காணப்படுகிறார் என்று கூறி வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தனது 62 ஆம் படத்திற்காக தயாராகி வருகிறார் என்றும் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.