ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் சீயான் விக்ரம்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகம் உழைப்பவர் விக்ரம் என்பது தெரிந்ததே. வித்தியாசமான வேடங்களை ஏற்று தான் ஏற்றுக்கொண்ட கேரக்டராகவே வாழ்ந்து வரும் விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஸ்கெட்ச்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருக்கும் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஆர்.எஸ்.விமல் என்ற மலையாள இயக்குனர் இயக்கவுள்ள இந்த சரித்திர படத்திற்கு 'மகாவீர் கர்ணன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டில் ரோலான கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தி, தமிழ் உள்பட பல மொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும், உலகம் முழுவதிலும் இருந்து பல டெக்னீஷியன்கள் இந்த படத்தில் பணிபுரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2019ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ரசிகர்களுக்கு கமல் விடுத்த எச்சரிக்கை

சமீபத்தில் நடந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சூர்யா 37' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சூர்யா நடித்த 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

2வது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் வேட்டையில் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து விமர்சகர்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது.

மலேசியா எனக்கு இரண்டாவது வீடு: ரஜினிகாந்த்

நேற்று மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோலிவுட் திரையுலகின் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

110 திரையரங்குகளில் 25 நாட்கள்: அருவியின் அருமையான சாதனை

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படமான 'அருவி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது.