நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே.. நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விக்ரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள், ஆனால் நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் திரையுலகிற்கு அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கடந்த 1990ஆம் ஆண்டு இதே அக்டோபர் 17ஆம் தேதி ’என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விக்ரம். இதனை அடுத்து அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 32 ஆண்டுகளில் அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் திரையுலகில் 32 ஆண்டுகள் ஆனது நிறைவு பெற்றதை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு நிமிட வீடியோ ஒன்று அவர் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் இதுவரை நடித்த மாஸ் கேரக்டர்களின் காட்சிகள் உள்ளன. இந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி.
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. ?? இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL
— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com