பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசன் திரைப்படம்

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இரண்டுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இரண்டு படங்களும் வெற்றி பெற்றி நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் பொங்கல், தலைவர், தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி சீயான் விக்ரம் ரசிகர்களுக்குமான பொங்கலாக மாறியுள்ளது.

சீயான் விக்ரமின் 56ஆவது படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஸ்ரீனிவாஸ் குத்தா ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் பிரேம் நவாஸ் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.