இன்று விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு செம்ம விருந்து இருக்கு.. 'சியான் 62' படத்தின் சூப்பர் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ள ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 62 வது படத்தின் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.
சமீபத்தில் வெளியான சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அருண்குமார் தான் ’சியான் 62’ படத்தை இயக்கப் போவதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஹெச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் ’சியான் 62’ படத்தின் சூப்பர் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து வெளியான போஸ்டரில் அருண்குமார் மற்றும் ஜிவி பிரகாஷ் பெயர்கள் இருப்பதை அடுத்து இந்த படத்தில் இருவரும் பணி புரிய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகுமா? அல்லது வேறு ஏதேனும் தகவல் வெளியாகுமா? என்பது தெரியவில்லை என்றாலும் சியான் ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு தரமான விருந்து இருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் படப்பிடிப்பிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Get ready at 6:00PM for our important actor reveal !!
— HR Pictures (@hr_pictures) March 3, 2024
Could be against all your choices and guesses
Stay tuned !!
@chiyaan #Chiyaan62 @iam_SJSuryah #SUArunKumar @gvprakash @hr_pictures @riyashibu_ @shibuthameens @propratheesh @nareshdudani @sooriaruna @proyuvraaj pic.twitter.com/4gPcYZ9fZx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments