என் மகளை அவர் தான் கொன்றுவிட்டான், அவரை நானே கொல்வேன்: சித்ரா தாய் ஆவேசம்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன் சித்ராவின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து சித்ராவின் கோட்டூர்புரம் வீட்டிற்கு தற்போது அவரது உடலை கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை பெற்றுக் கொண்ட சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தபோது ’எனது மகளை அவரது கணவர் தான் அடித்து சாகடித்த விட்டார். என் மகள் கோழை அல்ல. யாருக்காவது தற்கொலை இருந்தால் அந்த எண்ணத்தை எனது மகள் மாற்றுவார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

சித்ராவுக்கு பதிவு திருமணம் நடந்தது உண்மைதான். பதிவு திருமணத்தில் 6 பேர் மட்டும் கலந்து கொண்டோம். ஹேமந்தை நம்பி நான் சித்ராவை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் சாகடித்து விட்டார். அவரை நானே கொன்றுவிடுவேன். முல்லை ரசிகர்கள் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் ’எனது மகளை அவரது கணவன் கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் அளிப்பேன்’ என்று கூறிய சித்ராவின் தாயார், ’வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தான் என் மகளுக்கு ஊரறிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

சித்ரா தாயாரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற! நெட்டிசன்கள் பாராட்டு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா பேசியபோது, 'எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்ரது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா அறிவிப்பு என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை காலை 11.07 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும்

சிங்களுக்கும் கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸின் மரபணுவில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக என விஞ்ஞானிகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 5 நிமிஷத்துல கொரோனா கண்டறியும் முறை… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்: விசாரணையில் திருப்பம் ஏற்படுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய