சித்ரா கணவர் ஹேமந்த் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட தகவல் சின்னத் திரை உலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அவரது கணவர் ஹேமந்த் தான் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டி அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஹேமந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் தான் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை இன்னும் தன் மீது தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் சித்ரா கணவர் ஹேமந்த்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் ஹேமந்த் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'அயலான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை… குவியும் லைக்ஸ்!

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!

பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!

இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது