இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கிய சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா… விவாகரத்து காரணமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை திடீரென நீக்கியுள்ளார். இதனால் அவர் தனது கணவரை பிரியப்போகிறார் என்பதுபோன்ற தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு சுஷ்மிதா என்ற மூத்த மகளும் ஸ்ரீஜா என்ற இளைய மகளும் உள்ளனர். மேலும் இவருடைய ஒரே மகன் ராம் சரண் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் சிரிஷ் தன்னை சித்ரவதைச் செய்கிறார் என்று புகார் அளித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்.

இதையடுத்து தெலுங்கு நடிகர் கல்யாண் ராவ் என்பவரை ஸ்ரீஜா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நவிஷ்கா என்ற 3 வயது பெண் குழந்தையும் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ஸ்ரீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியான ஸ்ரீஜா கல்யாண் என்பதில் இருந்து கல்யாணை நீக்கிவிட்டு தனது அப்பா சிரஞ்சீவியின் குடும்பப் பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார். இதனால் ஸ்ரீஜா தனது கணவரைப் பிரியப்போகிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

முன்னதாக நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரிவதற்கு முன்பே தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கியிருந்தார். இதையடுத்து ஒருசில வாரங்களில் அவர்களது விவாகரத்து குறித்த தகவல் வெளியானது. தற்போது இதே வழிமுறையை பின்பற்றி சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜாவும் தனது கணவரை விவாகரத்துச் செய்யப்போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத் தகவலை சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து யாரும் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இது குறித்து பல திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து

பூஜா ஹெக்டேவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்: ரசிகர்களின் சுவாரஸ்ய கமெண்ட்ஸ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் வேற லெவல் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில்

கவின் அடுத்த படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்தாரா செல்வராகவன்?

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் இரவு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

9 ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் இயக்கும் திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர் என வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.