அஜித் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்த நிலையில் தற்போது அஜீத்தின் இன்னொரு படத்தின் ரீமேக்கில் அவரது சகோதரர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’என்னை அறிந்தால்’. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக அஜித், த்ரிஷா காட்சிகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த வேடத்தில் நடிகர் சிரஞ்சீவி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த படத்தை சுஜீத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் சுஜித் ஏற்கனவே பிரபாஸ் நடித்த சாஹோ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி தற்போது ’ஆச்சார்யா’ படத்தை முடித்துவிட்டு ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’என்னை அறிந்தால்’ ரீமேக் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி படத்தின் அப்டேட்டை கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் அப்டேட்டை சற்று முன்னர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 

கவிப்பேரரசுக்கு உயரிய விருது… ஸ்டாலின் புகழாராம்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மலையாளப் பல்கலைக்கழகம் அம்மாநிலத்தின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்ட யார்க்கர் மன்னன்: புகைப்படம் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னர் என்று கூறப்படும் தமிழரான நடராஜன் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

"துப்பு கெட்ட நிர்வாகம்" சேஷாத்ரி பள்ளி...! சரமாரியாக கிழித்தெடுத்த நடிகர் அசீம்...!

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகோபாலன். அப்பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர்

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா: ஜூவாலா கட்டாவின் வைரல் புகைப்படம்!

பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பாதிப்பு காலம்