தாத்தா ஆகிவிட்டேன்… பேத்திக்கு செல்லப்பெயர் வைத்த நடிகர் சிரஞ்சீவி… வைரலாகும் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பிரபல நடிகராக இருந்துவரும் ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி தம்பதிகளுக்கு இன்று பெண் குழந்தை பிறந்ததை அடுத்து தன்னுடைய பேத்தியை வரவேற்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிரஞ்சீவி 1978 இல் ‘புனாதிரல்லு‘ எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் போலீஸ் அதிகாரிக்கு மகனாக பிறந்த இவர் சினிமாவைத் தவிர தீவிர அரசியலிலும் முத்திரைப் பதித்தார். இந்நிலையில் 68 வயதிலும் சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டார் அந்தஸ்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய மகனான நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதிகளுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையை வரவேற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தாத்தாவான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘லிட்டில் மெகா பிரின்சஸ்‘ என்று பதிவிட்டுள்ளார். மேலும் நான் தாத்தாகிவிட்டேன் என்று பெருமைபட்டுள்ளார். நடிகர் சிரஞ்சீவிவைத் தவிர அவரது குடும்பத்தில் பல சினிமா பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சிரஞ்சீவின் சகோதரர் நடிகர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் ராம் தேஜ் ஆகியோரும் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
2007 இல் சிறுத்தை திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ராம் சரண் தொழில்முனைவரான உபாசனா காமினேனியை கடந்த 2012 ஜுலை 14 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 வருடம் கழித்து ராம் சரண் மற்றும் உபாசனா இருவரும் அழகான பெண் குழந்தையை பெற்றுள்ளனர். இதனால் தாத்தாவான மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ‘லிட்டில் மெகா பிரிசன்சஸ்‘ என்று தன்னுடைய பேத்தியை வரவேற்று டிவிட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
Welcome Little Mega Princess !! ❤️❤️❤️
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 20, 2023
You have spread cheer among the
Mega Family of millions on your arrival as much as you have made the blessed parents @AlwaysRamCharan & @upasanakonidela and us grandparents, Happy and Proud!! 🤗😍
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments