இன்னொரு நடிகையும் விவாகரத்தா? கணவரை அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் திடீரென விவாகரத்து செய்து வருவது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிஹாரிகாவும் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற தமிழ் படத்திலும், ஒரு சில தெலுங்கு படத்தில் நிஹாரிகா நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெங்கட் சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து விட்டதாகவும் குறிப்பாக திருமண புகைப்படங்களை டெலிட் செய்து விட்டதாகவும் அதுமட்டுமின்றி அவரை அன்பாலோ செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் வெங்கட் சைதன்யாவும் நிஹாரிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்து அவர் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து விட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் விரைவில் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெலுங்கு திரை உலகை வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments